அடக்கம் செய்வது சம்பந்தமான புதிய வழிகாட்டல்

தமிழ் ​செய்திகள் இன்று


அடக்கம் செய்வது சம்பந்தமான புதிய வழிகாட்டல்

கொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டது.

அத்துடன் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் வௌியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.