கருத்தடை மாத்திரை, கொத்து ரொட்டி தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க

கடந்த தேர்தல்களில் ராஜபக்சவினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற பல்வேறு பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்தடை மாத்திரை கலந்த கொத்து ரொட்டி, பெண்களை மலடாக்கும் சிகிச்சைகள், குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் தொடர்பான எந்த தகவல்களும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை.

தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைக்கும், தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து அனுசரணை வழங்கிய தலைவர்களை மறைக்கும், அதன் அரசியல் நோக்கத்தை மறைக்கும் செயற்பாடுகள் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தாக்குதலை தடுக்க தவறியவர்கள் குற்றவாளிகள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறைந்தது தற்கொலை தாக்குதல் நடத்திய அணியின் தலைவரான சஹ்ரான் ஹசீம், புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய உளவு தகவல்களோ, அவருக்கு செலுத்திய சம்பளம் குறித்தோ, ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவரவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

You may also like...