ஜனாதிபதியிடமிருந்து தப்பிக்க முடியாத நபர்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதியிடமிருந்து தப்பிக்க முடியாத நபர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்பு கூறவேண்டிய எந்தவொரு நபருக்கும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது தற்போதைய அரசாங்கத்திடமிருந்தோ தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக அதிகமான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் மேலதிகமாக, இடம்பெற்ற 08 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வழக்குத் தொடர தேவையான சான்றுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்லதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவில்லை அல்லது சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதாக தற்போதைய அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் குற்றம்சாட்ட முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் அதிருப்தி முற்றிலும் நியாயமானது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பேராயர் மெல்கம் அவர்கள் முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவது நியாயமானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையின் நகலொன்றை கார்டினல் அவர்களிடம் விரைவாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.