மைத்திரியின் மகன் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட அறிக்கை

பேலியகொடை பொலிஸ் நிலையத்தினுள் சட்டத்துறை மாணவர் மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் தௌிவுப்படுத்தி பேலியகொடை பொலிஸ் நிலைய பரிசோதகரால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய பேலியகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையொன்றை மேற்கொண்டு நடவடிக்கை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை நேற்று (23) பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...