போதையில் தனது ஆணுறுப்பை வெட்டிய வீசிய நபர்

போதையில் தனது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மெயின்ஸ் நகரை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கஞ்சா போதையில் தனது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி வீசியுள்ளார்.

உறுப்பை வெட்டியபின் பதறிப்போய் எமர்ஜென்சி எண்ணுக்கு அழைத்து பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது வீட்டுக்கு போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் விரைந்தனர்.

அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு ஆணுறுப்பு தனியாக வெட்டப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கு முன் வீட்டிலேயே வைத்து அவசர சிகிச்சை வழங்கப்பட்டது.

அவரது ஆணுறுப்பை மீண்டும் உடலில் இணைக்க எமர்ஜென்சி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது, அறுபட்ட ஆணுறுப்பும், கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டன.

சவரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கத்தியை பயன்படுத்தி அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அச்சமயத்தில் அவர் கடும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது ஆணுறுப்பை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஆணுறுப்பை நிச்சயமாக இணைக்க முடியுமா என்பது குறித்து மருத்துவர்கள் உறுதியாக தகவல் தெரிவிக்கவில்லை.

You may also like...