வாகனங்கள் வாங்க எண்ணியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வாகனங்கள் வாங்க, வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நிதி வசதியின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, (லீசிங்க வசதி) வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கமைவான உத்தரவு, மத்திய வங்கியின் நாணய சபையினால், வங்கியல்லா நிறுவனங்களுக்கு கடந்த 17 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிதி வணிகச் சட்டத்தின் 12ஆவது சரத்தின்கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவின் படி, முதற்தடவை பதிவுசெய்யப்பட்டதன் பின்னர், இந்த நாட்டில் ஒரு வருடத்திற்கும் அதிக காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு, அதன் பெறுமதியில் 80 சதவீத நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஓரளவு சாதகமான நிலைக்கு கொண்டு வருவதற்கும் ஒரு வலுவான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் குறித்து சிலர் தெரிவித்த கருத்துக்களை தாம் நிராகரிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

You may also like...