பெண் பூசகரின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

தமிழ் ​செய்திகள் இன்று


பெண் பூசகரின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மீகஹவத்தை – தெல்கொட – கந்துபொட பகுதியில் பதிவாகியுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 9 வயதான சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமியை அவரது பெற்றோர் பெண் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

இதன்போது சிறுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பெண் பூசகர் அவரை பிரம்பால் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது சிறுமி மயக்கமடைந்த நிலையில் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பூசகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முறைசாரா சிகிச்சையின் விளைவாக கடந்த காலங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.