அமைச்சர் விமல் மற்றும் வாசுதேவ கலந்துகொள்ளாத கூட்டம்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய கூட்டப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இவர்கள், இருவரும் கலந்து கொள்ளமைக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் குறிப்பாக அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிந்து கொண்டதால், இவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அமைச்சர் விமல் வீரவங்ச கூட்டத்திற்கு வந்து, பிரச்சினைகளை ஏற்படுத்தினால், அதற்கு பதில் தாக்குதல்களை தொடுக்க பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் தயாராக இருந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும் அமைச்சர் விமல் வீரவங்ச, ஏன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதய கம்மன்பிலவிடம், கட்சித் தலைவர்கள் கேட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் தமக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.

You may also like...