மஹிந்த – ரணில் அவசரமாக நடத்திய இரகசிய சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையே பெந்தொட்டையில் வைத்து சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அருண பத்திரிகை ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியபோது, “ஆம் அது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு. சந்திக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

மற்றவர்களுக்கு பிரதமரை பாராளுமன்றில் சந்திக்க முடியும். நான் இந்த சந்திப்பில் பொருளாதாரம் குறித்து பேசினேன். அவர் நிதி அமைச்சர் தானே” என்று ரணில் விக்ரமசிங்க பதில் அளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் நீண்ட கால அரசியல் நண்பர்களான ரணில் – மஹிந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை பல வகைகளிலும் பேசுபெருளாக மாறியுள்ளது.

விசேடமாக எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த சந்திப்பின் பின்னர் ஏற்படக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

You may also like...