கொழும்பை பரபரப்பாக்கிய சடலப் பொதி – வௌியாகியுள்ள தகவல்

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பை பரபரப்பாக்கிய சடலப் பொதி – வௌியாகியுள்ள தகவல்

கொழும்பு – டாம் வீதி சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போட்டுச் சென்றுள்ளார்.

இந்த பெண்ணின் சடலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

26 வயதுடைய இந்த பெண்ணை ஹங்வெல்ல பிரதேசத்தில் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் வேல்லவீதி ஊடாக இந்த பெண்ணின் சடலத்தை கொண்டு வரும் முறையை பொலிஸார் சிசிரீவி ஊடாக கண்டுபிடித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் நேற்று கொழும்பு சட்ட வைத்தியரினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தை இன்றைய தினம் பையில் இருந்து வெளியே எடுத்து பரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

பையில் இருந்த சடலத்தை நேற்று மாலை வரை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . அத்துடன் பிரித்து எடுக்கப்பட்ட தலை பையினுள் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைக்காக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க காவல்துறையினர் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தொலைபேசி எண்கள் : 071 859 1557 / 011 243 3333