ஜனாஸா அடக்கம் – உறுதிப்படுத்திய இம்ரான்கான்

கோவிட் – 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் அறிவித்தது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இம்ரான் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும், நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெற்காசியாவின் முஸ்லிம் தலைவராக இந்தியாவைத் தவிர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...