பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய் – யாழில் சம்பவம்

தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் மூர்க்கத்தனமாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

யாழ் மணியம்தோட்டத்தில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாளை நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றிய இப்பெண் சில மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.

வீயோவைக் காண https://m.facebook.com/story.php?story_fbid=3607317152710934&id=100002980558162

You may also like...