மத்ரஸா பாடசாலைகள் குறித்து எடுக்கப்படவுள்ள உறுதியான தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


மத்ரஸா பாடசாலைகள் குறித்து எடுக்கப்படவுள்ள உறுதியான தீர்மானம்

மத்ரஸா பாடசாலைகள் குறித்து கல்வியமைச்சு வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

ஒரு சில காரணிகளை கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் விமர்சிப்பது அடிப்படையற்றது.

அறிக்கை முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது. எதிர்வரும் வாரம் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

மத்ரஸா பாடசாலை கல்வி முறைமை ஊடாக மாணவர்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது என ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்து.

மத்ரஸா பாடசாலை குறித்து கல்வியமைச்சு வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் என ஜி.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்ரஸா பாடசாலைகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக செயற்படுத்துவோம்.

மாணவர்களுக்கு கற்றல் முறைமை ஊடாக அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது என்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு துரிதகரமாக செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.