விண்வௌியில் நவீன வசதிகளுடன் உருவாகும் பிரமாண்ட விடுதி

தமிழ் ​செய்திகள் இன்று


விண்வௌியில் நவீன வசதிகளுடன் உருவாகும் பிரமாண்ட விடுதி

விண்வெளியில் சகல வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றை அமைக்க நாசா தீர்மானித்துள்ளது.

இந்த விடுதி சுமார் 400 அரைகளை கொண்டதாக 2025 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலவுக்கு இணையான ஈர்ப்பு விசையை கொண்ட பகுதியில் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளதாகவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடுதியில் திரையரங்குகள், உணவகங்கள், மதுபானசாலைகள் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் நிர்மாணப்பணிகள் 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டில் நிறைவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே 2027ஆம் ஆண்டின் பின்னரே மக்களின் பாவனைக்காக இந்த கனவு விடுதி திறக்கப்படும் எனவும் நாசா குறிப்பிடுகின்றது.

வாழ்விட தொகுதிகள் ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும், மேலும் ஓட்டல் அறைகள் முதல் திரைப்பட அரங்குகள் வரை வேறுபட்ட செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.

விண்வௌியில் நவீன வசதிகளுடன் உருவாகும் பிரமாண்ட விடுதி

விண்வெளி ஓட்டல் ஒரு பெரிய வட்டமாக இருக்கும் மற்றும் செயற்கை ஈர்ப்பை உருவாக்க சுழலும், இது சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு சமமாக அமைக்கப்படும்.

இந்த ஓட்டலில் தங்கும் அறைகள், சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகள் உள்ளன.

ஒரு கப்பலில் நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தும், ஆனால் இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் உலகை சுற்றும் வகையில் இருக்கும் .

பணிகள் நிறைவுற்ற பின் இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2025ல் கட்டுமானப் பணிகள் முடிந்தாலும் 2027ம் ஆண்டு முதல்தான் மனிதர்கள் செல்லமுடியும் என்று ஆர்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் கட்டுமானப் பணிகளுக்கான செலவு, மனிதர்கள் தங்கும் செலவு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

விண்வெளி சுற்றுலா செல்ல இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளனர்.

விர்ஜின் நிறுவனத்தின் தலைமையிடமான மெக்ஸிக்கோவில் இருந்து விண்வெளிக்குப் புறப்படும் பயணத்திற்கான ஒரு விண்வெளி டிக்கெட் 250,000 டாலர்களுக்கு விற்பனை ஆகிறது.

இந்திய மதிப்பில் இது 1,82,54,375 ரூபாய்!