அடுத்த ஜனாதிபதி பசில் – பிரதமர் கோட்டாபய – வௌியாகியுள்ள தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி (2024இல் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலில்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பஸில் ராஜபக்ஸவே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

இதற்கான செயற்பாடுகளை அவர் ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக போட்டியிடாததால் அவர் தமது பதவி காலம் முழுவதையும் அனுபவிப்பார்.

அவரையடுத்து பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவும் இருக்கக்கூடும் என்று நலிந்த ஜெயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகிறார்.

இதேவேளை பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நம்புவதாகவும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நம்புவதாகவும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பவருமான பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதான பௌத்த தேரர்களுக்குப் பின்னால் சீனா செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்து-லங்கா-சீனா-அமெரிக்கா பூகோள அரசியல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டுவரும் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

You may also like...