ஆறு பெண்களை காணவில்லை – கொழும்பு டேம் வீதி பொலிஸாருக்கு அழைப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


ஆறு பெண்களை காணவில்லை – கொழும்பு டேம் வீதி பொலிஸாருக்கு அழைப்பு

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு காணாமல் போன 6 பெண்கள் தொடர்பான தகவல்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டேம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு விஷேட தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு சுமார் 40 அழைப்புக்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்புக்களில் 06 அழைப்புக்கள் காணாமல் போயுள்ள பெண்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பெண்களின் குடும்ப உறுப்பினர்களால் இந்த அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.