கொரோனா தடுப்பூசி ஹலாலா? உலமா சபை விஷேட கூட்டம்

கொரோனா தடுப்பூசிகள் குறித்து முஸ்லிம் மக்களிடையே பல்வேறு விதமான கருத்தாடல்கள் எழுந்துள்ள நிலையில், அவை ஹராமா? ஹலாலா என்பது குறித்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கலந்துரையாடியுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்றிரவு இடம்பெற்றதாக தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உலமா சபையின் உயர்மட்டக் குழுவினர் மற்றும் பிரதான முஸ்லிம் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் பங்குப்பற்றியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறாக அறிவித்துள்ள பேராயரின் அழைப்பு குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

 

You may also like...