ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதற்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You may also like...