தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய திட்டம்

தேசிய அடையாள அட்டையில் உள்ள தகவல்களை இணையத்தளத்தில் உறுதிப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை ஆட்பதிவுத் திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரச நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தொலைபேசி சேவை வழங்குநர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் சேவைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இது பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அடையாள அட்டைகளை இணையத்தளத்தில் தங்கள் விருப்பப்படி பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்ள உதவும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You may also like...