உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் தொடர்பா? அசோக அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவுக்கு எதிராக, பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07) முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, அரசியல் கூட்டம் ஒன்றில் அசோக் அபேசிங்க கருத்து தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து, பஸில் ராஜபக்ஷ குழுவினரே உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதத் தாக்குதலை நடத்தியதாக அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இதற்கு முழுமையான பண உதவியை செய்தது அவன்காட் நிறுவனத் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதியே என்றும் அவர் தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய அசோக அபேசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் ஊடாகவே ரணில்-மைத்திரி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கோட்டா-மஹிந்த அரசாங்கத்தினால் முடிந்ததாக குறிப்பிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகள் அவசியம் என்றும் கூறினார்.

இந்நிலையல் இது தொடர்பில், உடன் விசாரணை நடத்த வேண்டும் என, முறைப்பாட்டாளர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின பாராளுமன்ற உறுப்பினர்களான ரமித்த பண்டார தென்னகோன், சாமிந்த கிரிந்திகொட, மதுர விதானகே, சஞ்ஜீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க ஆகியோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You may also like...