குடிநீர் தொடர்பில் பொதுமக்களுக்கு விஷேட வேண்டுகோள்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் பல பாகங்களில் தற்சமயம் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் பற்றாகுறை ஏற்படலாம் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பண்டிகை காலப்பகுதியில் நீர் வெட்டு மேற்கொள்வதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

You may also like...