முஸ்லிம் ஆண்கள் நான்கு திருமணம் செய்யும் நடைமுறை இரத்து

தமிழ் ​செய்திகள் இன்று


முஸ்லிம் ஆண்கள் நான்கு திருமணம் செய்யும் நடைமுறை இரத்து

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அதன்படி 18 வயதுக்கு கீழான யுவதிகளை அவர்களின் விருப்பம் இன்றி திருமணம் செய்து வைப்பதில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேநேரம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதற்கு முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்த அனுமதியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் காதி நீதிமன்றத்திற்கு பதிலாக நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து வழங்கும் நடைமுயையை அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.