இலங்கையில் மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கையில் மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளன. குருவிட்ட, எஹெலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளன.

இதேவேளை, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திட்டமிட்டு திருடும் ஒரு குழுவினராலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, மோட்டார் சைக்கிள், முச்சகர வண்டிகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துமாறு வலியுறுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமும் அற்ற வாகனங்களை கொள்வனவு செய்பவர்கள், திருடப்பட்ட வாகங்களைக் கொள்வனவு செய்பவர்களாவே கருதப்படுவர்.

இவ்வாறான குழுக்களால் திருடப்படும் வாகனங்கள் கொழும்பிலும் கொழும்பிலும் வெளிப் பிதேசங்களிலும் குறிப்பிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திருடப்பட்டவை எனத் தெரிந்தும் அவர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான இடங்கள் தொடர்பில் பொலிஸார் சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளனர் என்றார்.