யாழில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு

தமிழ் ​செய்திகள் இன்று


யாழில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியிலிருந்து இன்று காலை ஆபத்தான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.