ஊடகங்கள் முன்னிலையில் தேம்பி தேம்பி அழுது புலம்பிய சுமனரத்ன தேரர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தன்னைப் பற்றி தவறாக கூறப்பட்டுள்தாக தெரிவித்து அம்பிட்டியே சுமண தேரர் ஊடக சந்திப்பு நடத்தி அழுது புலம்பியுள்ளார்.
அறிக்கையின் 411வது பக்கத்தில் கண்டி திகன இனக்கலவரத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அது குறித்து தனியான ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதென அம்பிட்டியே சுமண தேரர் தெரிவித்துள்ளார்.
தான் திகன சென்றது உறவினர் வீட்டுக்கு எனவும் அங்கு நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எம்மை போன்ற அப்பாவி பிக்குகளை ஆணைக்குழு விசாரணை மூலம் சிறையில் அடைப்பதால் தீர்வு கிடைக்குமா என ஜனாதிபதியிடம் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது சுமண தேரர் விசாரணை அறிக்கையை மேசையில் வீசினார்.
அம்பிட்டிய சுமண தேரர் இதற்கு முன்னர் அரச ஊழியர்களை கெட்டவார்த்தைகாளால் திட்டியுள்ளதுடன் மத தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.