புலனாய்வுப் பிரிவினருக்கு அரபு மொழிப் பயிற்சி வழங்க தீர்மானம்

அடிப்படைவாத கொள்கைகளை பரப்பும் இஸ்லாமிய சமய விடயங்கள் அடங்கிய நூல்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதை தடுப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அரபு மொழி தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்லாமிய சமய நூல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என அந்த அமைச்சு, சுங்க திணைக்களம் மற்றும் இஸ்லாம் சமய விவகார திணைக்களம் ஆகியவற்றுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் நூல் இறக்குமதியாளர் ஒருவர், இலங்கைக்கு கொண்டு வந்த இஸ்லாமிய நூல்களில் வஹாபிச அடிப்படைவாத கொள்கைகளை பரப்பும் சுமார் ஆயிரம் நூல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரபு மொழி அறிந்த அதிகாரிகளை கொண்டு நடத்திய பரிசோதனையில், அடிப்படைவாதம் மற்றும் நல்லிணக்கத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நூல்கள் அவற்றில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியான நூல்கள் இலங்கைக்குள் இருக்கின்றதா என்பதை கண்டறிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு ஆறு மாத அரபு மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

You may also like...