பெதுபல சேனா அமைப்பை தடை செய்ய முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுபல சேனா அமைப்பை தடை செய்வதற்கு பரிந்துரைத்த போதிலும் அதனை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபல சேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும்.

அரசாங்கத்தின் விருப்பமும் அது இல்லை. அந்த அமைப்பை தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அவ்வமைப்பை தடை செய்யாது.

ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“மத்ரஸா பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள், பாட விதானங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம்.

மத்ரஸாபாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

You may also like...