நீண்ட நாட்களின் பின் ஊடகங்களிடம் சிக்கிக் கொண்ட மைத்திரிபால

தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை சுற்றிக்கொண்டனர்.

கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

“குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன்வைக்கப்பட்டாலும் அதனை நான், கவனத்தில் எடுக்கமாட்டேன்” என்றார்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்களே?

பதில்: “யாருக்குத்தான் குற்றச்சாட்டுகள் இல்லை, நான், அதனை கணக்கில் எடுக்கமாட்டேன், எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் கணக்கெடுக்கமாட்டேன்” என்றார்.

கேள்வி: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் உங்களுக்கு எதிராக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவே?

அக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது, கையை அசைத்தவாறு அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்

You may also like...