காரில் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான மேலதிக தகவல்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


காரில் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான மேலதிக தகவல்கள்

நேற்று இரவு 11.30 மணியளவில் கொஹுவல, ஆசிரி மாவத்தையில் கார் ஒன்றினுள் எரியுண்ட சடலமாக மீட்கப்பட்ட நபர் தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாக விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் 34 வயதுடைய வர்த்தகரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான இவர், திருமணத்தின் பின் கொஹுவல பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

சம்பவ இடம் கல்கிஸ்ஸை பதில் நீதவானின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு அரச ஆய்வாளர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரும் தற்போது குறித்த இடத்திற்குப் பிரசன்னமாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மேற்படி வர்த்தகர் வீட்டுக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்டதன் பின் மீண்டும் தனது வீட்டை நோக்கி பயணிக்கும் வழியில் அவரது கார் தீப்பற்றியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.