பொடுகு பிரச்சனைக்கு தீர்வு – பொடுகு நீங்க எளிய முறை

பொடுகு நீங்க எளிய முறை, பொதுவாக இன்றைக்கு பலர் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இது ஏற்பட வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது.

பொடுகின் தொல்லை அதிகமானால் முடியின் வேர்க்கால்கள் பலம் இழந்துவிடும். அதனால் முடி உதிர்வு அதிகமாகும்.

பொடுகு வந்தவுடனே அதை நீக்குவதற்கு எளிய வீட்டு வைத்தியங்களை செய்ய ஆரம்பித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.

பொடுகு ஏற்படக் காரணம் என்ன?

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.

பொடுகுப் பிரச்னையைப் போக்கலாம்’ என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூகளை, அதிகப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், `இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை’ என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்

தற்போது பொடுகை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

சாம்பார் வெங்காயம் அதாவது சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து. பிறகு 15 நிமிடம் கழித்து குளிக்க பொடுகு தொல்லை நீங்கும்.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு ரெம்ப நல்லது.

வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின்னர் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்க்கலாம்.

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும்.

வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம்.

மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

கூந்தலில் பொடுகை போக்கும் வழிகள் – பொடுகு நீங்க எளிய முறை

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்.

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும்.

இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.

You may also like...