சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நுவரெலியா – ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 குடியிருப்புகள் சேதமாகியதுடன், 54 பேர் நிர்கத்திக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர்.

தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே தீடிரென இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பரவலை பொதுக்களும் பொலிஸாரும் கடும் பிரயத்தனத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் 14 குடியிருப்புகளை கொண்ட குறித்த லயன் முற்றாக எரிந்து உடமைகளும் நாசமாகியுள்ளன.

பேர் நிர்கத்தியான நிலையில் தோட்ட ஆலயத்தித்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காளிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணமும் சேத விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரைணைகளை முன்னெடுத்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like...