கொழும்பில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த நான்கு பெண்களுக்கு 50 ரூபா அபராதம்

கொழும்பு நகரில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நான்கு யுவதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த யுவதிகளை தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை பொலிஸார் இந்த யுவதிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை அபராதம் செலுத்திய பின்னர், கைது செய்யப்பட்ட யுவதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

You may also like...