அசாத் சாலியின் காரில் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதா?

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்.

​பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில், கார் ஒன்றில் பயணித்த நிலையில், நேற்று பிற்பகல் அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் பயணித்த கார், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You may also like...