புர்கா தடை – இறுதி முடிவு எடுக்க நீண்ட செயன்முறை

நாட்டில் புர்காவை தடை செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு, நீண்ட செயன்முறை அவசியம் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புர்கா தடை குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக, கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா தடை குறித்த இலங்கையின் தீர்மானத்தை கண்டிப்பதாக பாகிஸ்தான் அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும் இலங்கை அரசு பாகிஸ்தானுக்கு ஏற்ற விதத்தில் செயற்படாதென தெரிவித்துள்ள சரத் வீரசேகர, இலங்கை அரசுக்கு ஏற்ற வித்திலேயே எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like...