கறுவா சிகரட்டை அறிமுகம் செய்து வைத்த விமல்

கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத சிகரட்டை அறிமுகம் செய்யும் நிகழ்வு கொழும்பில் நேற்று -11- நடைபெற்றது.

நாட்டின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆயுர்வேத சிகரட், இரசாயன சிகரட் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க இதனூடாக இயலுமை காணப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

தொழில்துறை அமைச்சராக, ஒரு புதிய உற்பத்தியாளரின் தயாரிப்புகளை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

 

You may also like...