புர்கா தடை என்பது புதிய விடயமல்ல – முஸ்லிம் நாடுகளும் தடை செய்துள்ளன
புர்கா அணிவது தடை என்பது உலகத்திற்கு புதிய விடயமல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, புர்கா தடை என்பது உலகில் புதிய விடயமல்ல.
உலகில் 16 நாடுகள் புர்கா நிகாபை தடை செய்துள்ளன. ஜனநாயகத்தின் அடையாளம் என போற்றும் சுவிட்சர்லாந்து கூட புர்க்காவை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
மொரோக்கோ, டியுசீனியா மற்றும் 98% முஸ்லிம்கள் வாழும் தஜிகிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகள் கூட புர்காவை தடை செய்துள்ளன என மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.