இலங்கையில் எந்தெந்த மத்ரசா பாடசாலைகள் தடை செய்யப்படும்?

இலங்கையில் மத்ரசாக்களை தடை செய்வது குறித்து வெளியிட்ட அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி அனைத்து மத்ரசாக்களையும் தடை செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. எஸ்.எம்.மரிக்கர் வெளியிட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அராபிய மொழியையும் மதத்தையும் மாத்திரம் கற்பிக்கும் மத்ரசாக்களையே தடை செய்யப்போவதாக தெரிவித்துள்ள அமைச்சர், இது தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரானது என்பதாலேயே தடை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கற்பிக்கும் மதரஸாக்கள் தடை செய்யப்படாது என்று அமைச்சர் கூறினார்.

இதற்கான அனுமதியை முஸ்லீம் சமூகமும் சிவில் அமைப்புகளும் வழங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...