பசறை விபத்தால் மூன்று பிள்ளைகளுக்கு ஏற்பட்ட நிலை

கடந்த 20 ஆம் திகதி லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பசறை பகுதியில் வைத்து பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன் 33 பேர் காயமடைந்திருந்தனர்.

அவர்களுள் ஒரு தம்பதியினரும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தம்பதியினரின் மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து தற்போது நிர்கதியான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிள்ளைகளின் தந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த பிள்ளைகளின் பாட்டி தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்று பிள்ளைகளும் பாட்டியின் அரவணைப்பில் உள்ளனர்.

இதேவேளை குறித்த குடும்பத்தின் வருமானத்திற்காக வழி இல்லாமல் போயுள்ளதாகவும் குழந்தைகளை பராமரிப்பது கஷ்டமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...