இலங்கையை கண்காணிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 12 பேர் அடங்கிய பணிக்குழாம் ஒன்றை அமைக்கவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானம், கடந்த 23 ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அடிப்படையிலான பணிகளின் நிமித்தம் செயற்படுவதற்காக, 12 பேர் கொண்ட விசேட பணிகுழாம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட ஆலோசகர்கள் மற்றும் குற்றவியல் விசாரணையாளர்களும் இந்த பணிக்குழாமில் உள்ளடங்கவுள்ளனர்.

You may also like...