அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறியுள்ளார்.
இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன்,மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.