தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கத் தயார்

சம்பள நிர்ணய சபை அங்கீகரித்த வகையில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தயார் என தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இன்று ரதெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட தொழில் சங்கம் மீண்டும் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்வதற்கு உடன்படுமாயின், அதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை ஆகக்கூடியதாக வழங்கும் சம்பளமாக இது அமைந்துள்ளது. இது 100 க்கு 100 சதவீத சம்பள அதிகரிப்பாகும்.

அரசாங்கம் என்ன எதிர்பார்ப்பது என்பது எமக்கு தெரியாது. சம்பள நிர்ணய சபையினால் தீர்மானம் மேற்கொண்டிருக்குமாயின், நாம் அதனை செலுத்த தயார் என்று அவர் கூறினார்.

தொழில் சங்கங்களுடனான கூட்டு உடன்படிக்கை தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தோட்ட தொழில்துறையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம்.

தோட்ட தொழிலாளர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள், தோட்ட முகாமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த தொழில்துறையை முன்னெடுக்க வேண்டும்.

அந்த உடன் படிக்கையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதினால் சட்ட ரீதியிலான உடன்பாடு எமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் கூட்டு உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டால் அது எமக்கு பிரச்சினை இல்லை.

சம்பள நிர்ணய சபையில் இருந்து வெளியேறி மீண்டும் வந்தால் அதனை Plantation Association மற்றும் சம்பந்தப்பட்டவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

You may also like...