யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

தமிழ் ​செய்திகள் இன்று


யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

யாழ்ப்பாணம் கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும், நாளை (29) முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தவிடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் வேறு தினங்களில் இதற்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.