உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிறந்த விசாரணை நடந்தது

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தின் ஊடாக சில தகவல்களை அரசாங்கத்துக்கு தந்திருக்கிறார்கள்.

நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு மாற்றங்களை உருவாக்கி மீண்டும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (28) செங்கலடியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவுற்ற தறுவாயிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தக் காலத்தில் கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ , அதனைச் சிறந்த முறையில் கையாண்டு முறியடித்து விட்டார். ஆனால், தற்போதைய சூழ்லில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையாகும். ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க ஒரு தனித்துவமான நாடு.

இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் உள்ளது. அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தின் ஊடாக சில தகவல்ளை அரசாங்கத்துக்கு அவர்கள் தந்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்.

குறைந்தது ஆறு மாதத்துக்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையில் சிறந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக நாடாளுமன்றத்தில் கூட விசேட ஆணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக இன்று அனைத்துத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக விரோதமான கருத்துக்களை முன்வைப்பதை நல்லது அல்ல எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

You may also like...