நரகத்துக்குச் செல்ல விரும்பும் அமைச்சர் விமல் வீரவன்ச

இல்மனைட் கனிம வளங்களை அகழ்வு செய்வது தொடர்பில், மாத்தறை கிரிந்த பிரசேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

கிரிந்த கடற்கரையோரத்தில் இருக்கும் கார்னட் மற்றும் இல்மனைட் கனிம வளங்களை பெறுவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்தப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததை அடுத்தே, மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த சமூகநல கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அந்த அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு இந்திய நிறுவனமொன்று முன்வைந்துள்ளது. சேவையாளர்கள் பலரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அவ்வாறான நிலைமையில், இந்திய நிறுவனத்துடன் இணைந்து பயணித்தால், சுவர்க்கத்துக்கு செல்லலாம் என்றனர்.

எனினும், “இல்லை, இல்லை நான், நரகத்துக்கே செல்வதற்கு விரும்புகின்றேன்” என அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது பதிலளித்தார்.

அத்துடன், அவ்வேலைத்திட்டம் அரசாங்கத்தின் கீழே முன்னெடுக்கப்படும் என்றார். அதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி, இந்த மாவட்டத்தின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆவர், அவருடைய தலையீடு இன்றி, எவ்விதமான செயற்பாடுகளையும் இங்கு முன்னெடுக்கமுடியாது என்றார்.

You may also like...