யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவர்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் தளம் மற்றும் இணையத்தளம் என்பனவற்றை நடத்திச் சென்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச நியமம் மற்றும் சைபர் இணையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இணையத்தளம் மற்றும் யூரியூப் தளம் என்பன இயங்கி வந்த இடத்தில் இருந்து 5 மடிக்கணனிகளையும், 5 கணனிகளையும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கைதானவர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You may also like...