போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் அடாவடி செயல்; நடுவீதியில் ஒருவரை எட்டி மிதிக்கும் காட்சி

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவருடன் நடுவீதியில் சண்டையிடும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

வீதிப் போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் குறித்த பொலிஸ் அதிகாரி, வீதியின் நடுவில் ஒரு மனிதருடன் சண்டையிடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி நபர் ஒருவரை நடுவீதியில் தூக்கி எறிந்து மிதிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன் தாக்குதல் நடந்த இடம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பேஸ்புக்கில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

You may also like...