இலஞ்சம் எடுத்து வசமாக சிக்கிய பொலிஸ் OIC: தப்புவதற்காக செய்த செயல்

வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகரொருவரிடம் 10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சமாக பெற்ற நாணயத்தாள்களை விழுங்கிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் 10,000 ரூபா பணத்தை இலஞ்சம் பெற்றுள்ள நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரிடம் நேற்று (29) கையும் களவுமாக சிக்கி உள்ளார்.

அதன்பிறகு, அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் ஆணைக்கு அதிகாரிகள் முன்னிலையில் 5000 ரூபாய் நோட்டுகள் இரண்டை விழுங்கி உள்ளார்.

இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, குறிப்பிட்ட போலிஸ் அதிகாரியை கம்பாஹா மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

ஒரு வாகன தகராறு தொடர்பாகவே குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

You may also like...