மற்றுமொரு தாக்குதல் சம்பவம் – இளைஞரை நடுவீதியில் தாக்கும் பொலிஸ்

தமிழ் ​செய்திகள் இன்று


மற்றுமொரு தாக்குதல் சம்பவம் – இளைஞரை நடுவீதியில் தாக்கும் பொலிஸ்

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நபர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதைப் போன்றே இன்னுமொரு பிரதேசத்திலும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

மஹரகம பிரதேசத்தில் நேற்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் பாரவூர்தி சாரதியை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியினால் நபரொருவர் தாக்கப்படுகின்றமை தொடர்பான புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அம்பாந்தோட்டை – வீரவில பிரதேசத்திலும் நேற்று பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய காணொளி, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.

எனினும் இதுகுறித்த உண்மை நிலவரம் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.