கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண புதிய முறை கண்டுபிடிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண புதிய முறை கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண கூடிய இரத்த பரிசோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பேராசிரியர் நீலிகா மலவிகே உட்பட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொவிட் வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை சோதிக்கும் இந்த சோதனைக்கு, விரல் நுனியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சொட்டு இரத்தம் போதுமானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த சோதனை விரைவான மற்றும் இலகுவான முறையென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனைக்காக இலங்கை, தாய்வான், இந்தியா, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்திருந்தனர்.

ஆரம்ப பரிசோதனையில் மிகவும் வெற்றிகரமான முடிவு கிடைத்துள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபர்களை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த பரிசோதனைக்கான விலை அதிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த பரிசோதனைக்கு தேவையான வசதிகள் கொண்ட பரிசோதனை கூடம் அவசியம் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இதனை பெறுவது சிக்கலாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.