பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தொடர்பில் வௌியான தகவல்
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சாரதி தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன.
கொழும்பு மஹரகம பகுதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரிய வருகிறது.
இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு வந்துள்ளார்.
அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொவிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி உரசி இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியாக லொறி சாரதியை தாக்க, பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தரும் தாக்கி இருக்கிறார்.
ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு தலை மற்றும் வயிறு வலிப்பதாக இவரை பார்க்க சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார்.
எனினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்கிய குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.